ஆப்பிரிக்காமீதானசீனாவின்சுங்கவரிஇல்லாதகொள்கைபற்றியகருத்துகணிப்பு

மே முதல் நாள் தொடங்கி, சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவியுள்ள 53 ஆப்பிரிக்க நாடுகளின் மீது சீனா காப்புவரி விலக்கச் சலுகையை அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளவுள்ளது. இது குறித்து, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளவில் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது என்ற சீனாவின் வர்த்தகக் கருத்துக்கு 87.3 விழுக்காட்டினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும், சீனாவின் இம்முயற்சியானது சீன-ஆப்பிரிக்க வர்த்தகத்தின் உயர்வேக அதிகரிப்பு, மக்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் அக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, ஆப்பிரிக்காவின் தற்சார்பு வளர்ச்சி திறனைத் தீவிரமாக்கும் என்று இந்தக் கருத்து கணிப்பில் கலந்து கொண்ட 85.2 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

இந்தக் கருத்து கணிப்பு சி.ஜி.டி.என் இணையத்தில், ஆங்கிலம், ஸ்பெயின், பிரெஞ்சு, அரபு, ரஷியா ஆகிய மொழிகளில் மேற்கொள்ளப்பட்டது.  

You May Also Like

More From Author