அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  

Estimated read time 0 min read

தமிழகத்தில் கத்திரி வெயிலுக்கு முன்னதாகவே மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.
ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு நிம்மதியான செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள் தமிழக மாவட்டங்களிலிருந்து மத்திய கொங்கன் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது வறண்ட வானிலையால் அவதிப்படும் மக்களுக்கு சற்று ஆறுதலைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author