வருமான வரித்துறையின் புதிய இணையதளம் மற்றும் ‘கர் சாதி’ ஏஐ உதவியாளர் அறிமுகம்  

Estimated read time 1 min read

இந்திய வருமான வரித்துறை, வரி செலுத்தும் முறையை எளிமையாக்கவும், வரி செலுத்துவோரின் சந்தேகங்களைத் தீர்க்கவும் ‘கர் சாதி’ (Kar Saathi) என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியாளர் மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது.
2025 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் மற்றும் எளிய விதிமுறைகளை மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த டிஜிட்டல் புரட்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ‘பிராரம்பா 2026’ (PRARAMBH 2026) என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தொடங்கியுள்ளது.
வரி ஏய்ப்பு இல்லாத, நேர்மையான வரி செலுத்தும் முறையை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

You May Also Like

More From Author