“5 நாட்களுக்கு ரயில் ரத்து!” – சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு செல்லும் பயணிகளே உஷார்..!

Estimated read time 1 min read

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 ஆகிய இரு நடைபாதைகளில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் ரயில்களில் ஒரு சில ரயில்கள் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு வரை செல்லக்கூடிய புறநகர் ரயில்கள்தான் தன்னை முழுமைக்கும் இருக்கக்கூடிய மாணவர்கள் , தினம் தரும் வேலைக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் என அனைவருக்கும் முக்கியமான பயன்பாட்டு மூலமாக இருக்கிறது.

ஆனால் சமீபத்தில் நடைபாதைகளில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக குறைவான ரயில்கள் இயக்கப்படுவதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கோடைகாலம் என்பதால் மக்கள் கூட்டத்தில் சிக்கி தவிக்கின்றனர். 5 -ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் ஒரு சில புறநகர் ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11, 11.20, 11.40, 11.59 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயில்கள் நாளை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல நாளைய தினம் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.20, 11, 11.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 3.55 மணிக்கு செங்கல்பட்டு புறப்படும் புறநகர் ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரை புறப்படும் ரயில் தாம்பரம் சென்னை கடற்கரை இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்பட உள்ளது.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.20, 11 மணிக்கு சென்னை கடற்கரை புறப்படும் புறநகர் ரயில் தாம்பரம் சென்னை கடற்கரை இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது. இன்று, 6, 7, 8 ஆகிய தேதிகளில் முழுவதும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 5.50 மணிக்கு புறப்படும் புறநகர் ரயில் ரத்து செய்யப்படுகிறது.

இன்று, 6, 7, 8 ஆகிய தேதிகளில் பகுதி நேரம் ரத்து செய்யப்பட்ட புறநகர் ரயில்கள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு காலை 3.50, 4.15 மணிக்கு செல்லும் ரயில் சென்னை கடற்கரை தாம்பரம் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று, 6, 7 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று, 6, 7 ஆகிய தேதிகளில் பகுதி நேரம் ரத்து செய்யப்பட்ட புறநகர் ரயில்களில் கூடுவாச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு இரவு 9.45, 10.10, 11.15 மணிக்கு புறப்படும் புறநகர் ரயில்கள் தாம்பரம் சென்னை கடற்கரை இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருபால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயில் தாம்பரம் சென்னை கடற்கரை இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படும் எனவும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு இரவு 10.20, 11 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரம் சென்னை கடற்கரை இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று, 6, 7, 8 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 4.35 மணிக்கு புறப்படும் ரயில் 4.45 மணிக்கு புறப்படும் எனவும் காலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில் 5.40 மணிக்கு புறப்படும் என கூறப்பட்டுள்ளது. இன்று, 6, 7, 8 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 3.55 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில் 4.05 மணிக்கு புறப்படும் எனவும் நாளைய தினம் நாளைய தினம் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 4.35 மணிக்கு செங்கல்பட்டு புறப்படும் ரயில் 4.45 மணிக்கு புறப்படும் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 3.55 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு புறப்படும் ரயில் 4.05 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author