சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜூலை 10ஆம் நாள் கெய்ரோவில் எகிப்து அரசுத் தலைவர் அப்துல் பத்தா அல்-சிசியைச் சந்தித்துரையாடினார்.
அப்போது லீச்சியாங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், இரு நாட்டுத் தலைவர்களின் நெடுநோக்கு வாய்ந்த தலைமையில் சீன-எகிப்து உறவு நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. எகிப்து தரப்புடன் இணைந்து ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவின் கூட்டு கட்டமைப்பின் கட்டுக்கோப்பில், பொருளாதாரம், வர்த்தம், நிதி, தயாரிப்புத் தொழில், புதிய எரியாற்றல், அறிவியல் தொழில்நுட்பம், மானிடப் பண்பாட்டியல் முதலிய துறைகளிலுள்ள ஒத்துழைப்புகளை வலுப்படுத்தச் சீனா விரும்புகிறது. மேலும், ஐ.நா, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பலதரப்புவாத அமைப்புகளில் எகிப்துடன் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலக முன்மொழிவுகளுக்கு எகிப்து ஆதரவளிப்பதாகவும் சீனாவுடன் பலதரப்புவாத ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புகிறேன் என்று அல்-சிசி கூறினார்.