இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதனை தொடர்ந்து இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தபட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் தொடரும் என்று சூளுரைத்த சில மணி நேரங்களிலேயே பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலகி இருப்பது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் இஸ்ரேல் மீது ஹமாஸ் பிரிவினைவாத அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாஸ் மீது தீவிர இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. 7 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் ஹமாஸ் போர் நீடித்து வருகிறது.
இந்த போரினால் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதனிடையே இருதரப்பினருக்கும் இடையே போர்நிறுத்தம் மற்றும் அகதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்த போதிலும் போர் நிறுத்தம் ஏற்படவில்லை.
இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிப்பதற்கு ஈடாக காஸாவில் இன்னமும் சிக்கியிருப்பதாக நம்பப்படும் 130 பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலின் உத்தேசத் திட்டம் முன்மொழியப்பட்டது.
அதனை வழிமொழிவது போல ஏப்ரல் 29ஆம் தேதி, அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன், இஸ்ரேல் முன்வைத்துள்ள போர் நிறுத்த உத்தேசத் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் பாலஸ்தீனப் போராளிகள் தாங்கள் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்துக்கு பல மாதங்களாக முயற்சித்து வருகின்றன. முந்தைய பல பேச்சுவார்த்தைகள் முறிந்து போன நிலையில் புதிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன. இரு தரப்பினருக்கும் இடையே சமரச ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கப்போவதாக கூறி தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல், தனது இலக்கின் இறுதிக்கட்டமாக ரபா நகரை குறிவைத்தது.
ரபா நகரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில், அங்கு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் கூறப்பட்டது.
இந்நிலையில் ,ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் அரசில் பங்கு வகிக்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ரபா நகருக்குள் புலம் பெயர்ந்து தஞ்சம் அடைந்துள்ள மக்கள் மட்டுமில்லாமல் ஹமாஸ் தீவிரவாதிகளும் பதுங்கி இருக்கிறார்கள் என்றும், அங்கே ஒளிந்து இருக்கும் பாலஸ்தீனர்களை அழிக்க வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம்.
இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ்க்கு ஆதரவாக அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய மாணவர்கள் போராட்டம் தீவிரமாகி ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மாணவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள முக்கிய அரங்கைக் கைப்பற்றி உள்ளனர். அமெரிக்காவில் தீவிரமடைந்து இருக்கும் போராட்டம் இஸ்ரேல் ஹமாஸ் போரை வேறு திசையில் நகர்த்தி செல்கிறது.
காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு கூடிக் கொண்டே வருகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் படி இஸ்ரேலில் 58 சதவீத மக்கள் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதில் புதிய திருப்பமாக பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலகி விட்டார். இக்கட்டானசூழ்நிலையில் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. இனி மத்திய கிழக்கு பகுதியில் புதிய புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.