தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லோக் போல் ஏஜென்சி நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பு ஆளுங்கட்சியான திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த கூட்டணி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 181 முதல் 189 இடங்களை வரை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டணி சுமார் 40.1 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களிடையே திமுகவிற்குப் பெரும் ஆதரவைத் தேடித் தந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.
தமிழக தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு: திமுக கூட்டணிக்கு மீண்டும் மெஜாரிட்டி?
