துரந்தர் 2 வசூல் வேட்டை: ரூ.1500 கோடியைக் கடந்து புதிய உலக சாதனை  

Estimated read time 1 min read

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் திரையரங்குகளில் அசைக்க முடியாத ஒரு சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
மார்ச் 19 ஆம் தேதி வெளியான இந்தப் படம், இந்திய பாக்ஸ் ஆபீஸில் மட்டுமின்றி உலக அளவிலும் மிகப்பெரிய வசூல் சாதனைகளை முறியடித்து வருகிறது.
வெறும் 16 நாட்களில் உலகளவில் 1,523.58 கோடி ரூபாய் வசூல் செய்து, 1500 கோடி ரூபாய் கிளப்பில் மிக வேகமாக இணைந்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையை இது படைத்துள்ளது.
இந்தியச் சந்தையில் மட்டும் விரைவில் 1000 கோடி ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உலக அரங்கில் இந்தப் படத்தின் ஆதிக்கம் வியக்கத்தக்க வகையில் உள்ளது.

You May Also Like

More From Author