சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 10 மணி வரை மழை பெய்யும்  

Estimated read time 1 min read

சென்னையில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
நகரின் பல முக்கிய பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக, தியாகராய நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், அசோக்நகர், வடபழனி, நுங்கம்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சைதாப்பேட்டை, K.K.நகர், விருகம்பாக்கம் மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது.
இந்தத் தொடர் மழையால் நகரின் பல சாலைகளில் நீர் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

You May Also Like

More From Author