தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாகவே சரிந்து வருகிற நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்றும் குறையுமா என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது
ஆபரண தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 24) கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,000-க்கும், ஒரு சவரன் ரூ.1,080 குறைந்து ரூ.1,12,000-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.255-க்கு விற்பனையானது
இன்று (செப்டம்பர் 25) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.14,010-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து, ரூ.1,12,080-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.
