சீன-ஐரோப்பிய ஒன்றிய மருத்துவ உபகரண வர்த்தகத்தை CIIE ஊக்குவித்தது

இவ்வாண்டின் சீனச் சர்வதேச இறக்குமதி கண்காட்சியில், சீன மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மருத்துவ உபகரணங்கள் பற்றிய வர்த்தக பேச்சுவார்த்தை நிகழ்வு நடைபெற்றது. இது, சீன-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் முதலீடு கலந்தாய்வு அமைப்புமுறைக்கான இரண்டாவது வழக்கமான கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய ஒருமித்த கருத்துக்களின் கீழ் பெறப்பட்ட சாதனையாகும் என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹெ யாடொங் 12ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், இந்த நிகழ்வில், 160க்கும் மேற்பட்ட சீனாவைச் சேர்ந்த மருத்துவ நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சந்தையை அடிப்படையாக கொண்ட கொள்முதல் செய்தன. அதேவேளையில், ஜெர்மனி, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த 40க்கும் அதிகமான மருத்துவ உபகரணத் தொழில் நிறுவனங்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்து, 100க்கும் அதிகமான ஒத்துழைப்பு விருப்பங்களை எட்டியுள்ளன என்று தெரிவித்தார்.

சீனச் சர்வதேச இறக்குமதி கண்காட்சியின் கீழ் நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தை நிகழ்வு, சீன-ஐரோப்பிய ஒன்றிய மருத்துவ உபகரண வர்த்தகத்தை ஊக்குவிக்க உதவிகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author