சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 5ஆம் நாள் அழைப்பையேற்று ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டு மத்திய கிழக்கு நிலைமை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
அப்போது வாங்யீ கூறுகையில், ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடான சீனாவும் ரஷியாவும் புறநிலையான சமநிலையான செயல்களை மேற்கொண்டு சர்வதேச சமூகத்திலிருந்து மேலதிக புரிந்துணர்வு மற்றும் ஆதரவைப் பெற வேண்டும் என்று கூறினார். சர்வதேச மற்றும் பிரதேசத்தின் சூடான பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் வழிமுறையில் தீர்வு காண்பதைச் சீனா எப்போதும் வற்புறுத்தி வருகிறது. தற்போது, மத்திய கிழக்கு நிலைமை மற்றும் போர் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. கூடிய விரைவில் போரை நிறுத்துவது ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்து பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மூலத் தீர்வாகும். சீனா, ரஷியாவுடன் ஐ.நா பாதுகாப்பவையில் தொடர்ந்து ஒத்துழைத்து முக்கிய பிரச்சினைகள் குறித்து உரிய நேரத்தில் பரிமாற்றம் மேற்கொண்டு மத்திய கிழக்கு நிலைமையைத் தணிவுபடுத்துவதற்கும் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தையும் உலகின் கூட்டு பாதுகாப்பையும் பேணிக்காப்பதற்கும் முயற்சி செய்ய விரும்புவதாக வாங்யீ தெரிவித்தார்.
