ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்பு தலைமை நாடாக பதவி ஏற்றதற்கு பிறகு, சீனாவின் பணித் திட்டங்கள் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜயாகுன் பிப்ரவரி 21ஆம் நாள் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த ஒற்றுமை மற்றும் ஒன்றுக்கொன்று நம்பிக்கை, அமைதி மற்றும் நிதானம், செழுமை மற்றும் வளர்ச்சி, சுமுகமான அண்டை நாட்டுறவு, நேர்மை மற்றும் நீதி ஆகியவற்றைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி பற்றிய முன்மொழிவை வழிக்காட்டலாக கொண்டு, அரசியல் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், பண்பாடு, அமைப்புமுறையின் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை சீனா ஆழமாக்கும் என்றார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதேசத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனங்களின் செயற்குழு கூட்டம், எல்லை பணியகங்களின் பொறுப்பாளர்களின் கூட்டம், பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சிகள் முதலியவற்றைச் சீனா நடத்தி, உறுப்பு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. கூறிப்பாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தொடரவல்ல வளர்ச்சி ஆண்டு என்ற தலைப்பில், பசுமை வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தகவல்களின் பகிர்வு, பசுமை மற்றும் கார்பன் குறைந்த தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளின் பயிற்சிகளைச் சீனா நடத்தி, பயனுள்ள சாதனைகளின் மூலம், இப்பிரதேசத்தின் பல்வேறு நாடுகள் மற்றும் மக்களுக்கு நன்மை புரிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இவ்வாண்டு நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சீனாவில் ஒன்றுக்கூடி, எதிர்கால வளர்ச்சி பற்றி விவாதம் நடத்தவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.