வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..!

Estimated read time 0 min read

கோவை வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பாஜக சார்பில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் களம் காண்கிறார்.தேர்தலையொட்டி அவர் தனது தொகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அடுத்த 48 மணி நேரத்திற்கு அவர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
 

You May Also Like

More From Author