இத்தாலியின் முன்னாள் தலைமை அமைச்சரும் ஐரோப்பிய ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ரொமானொ ப்ரோடி அண்மையில் சீன ஊடக குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி அளித்தார். சீனாவில் பல முறை பயணம் மேற்கொண்டுள்ள அவர், சீனாவின் வளர்ச்சி பற்றி தனித்துவமான கருத்துக்களைக் கொண்டுள்ளார்.
ஐரோப்பாவும் சீனாவும் ஒருபோதும் எதிரிகளாக இல்லை என்பதை அவர் வலியுறுத்தியதோடு, படிப்படியாக ஒத்துழைப்புகளை மேற்கொள்வதன் மூலம் முன்பில் இருந்து மாறுபட்ட புதிய பாதையில் கூட்டாக பயணிக்க முடியும் என்றும், இருதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக, வேற்றுமைக்கு மதிப்பளிக்கவும் நல்லெண்ணத்துடன் இருக்கவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு பற்றி அவர் கூறுகையில், ஒத்துழைப்புக்கான நேர்மையான முன்மொழிவு இதுவாகும் என்று குறிப்பிட்டார். அதனுடன் சீனாவின் வியக்கத்தக்க வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் காண வேண்டும். மின்சார வாகனம், மின்கலம், சூரிய ஆற்றல், காற்றாற்றல் உள்ளிட்ட புதிய உயர் தொழில்நுட்ப துறைகளில் சீனா ஈடிணையற்ற சாதனைகளைப் பெற்றுள்ளது. மேலும் தற்போது சீனாவின் மதிப்பு சங்கிலி வேறுபட்ட உற்பத்தித் துறைகளையும் இணைத்துள்ளது. இது தனித்துவமானது என்றும் அவர் தெரிவித்தார்.
