சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த அரசியல் தலைவருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
ராஜாஜி தேசத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு தேசம் கடமைப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது X சமூக ஊடகப் பக்கத்தில், “சுதந்திரப் போராட்ட வீரர், சிந்தனையாளர், அறிவாளி, அரசியல் மேதை… இந்த வர்ணனைகள் எல்லாம் திரு. சி. ராஜகோபாலாச்சாரியாரை நினைக்கும்போது மனதில் வருகின்றன. அவரது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிகள். 20ஆம் நூற்றாண்டின் மிகத் கூர்மையான சிந்தனையாளர்களில் அவர் ஒருவராகத் திகழ்கிறார். அவரது நீடித்த பங்களிப்பை தேசம் நன்றியுடன் நினைவுகூருகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
ராஜாஜிக்கு பிரதமர் மோடி அஞ்சலி: அரிய ஆவணங்களை பகிர்ந்து மரியாதை
