நீண்டகாலமாக வளர்ந்து வரும் சீன-ஜெர்மன் உறவு

ஜெர்மனியின் தலைமை அமைச்சர் மெர்ஸ் தனது பதவி காலத்தில் முதல் முறையாக சீனாவில் பயணம் மேற்கொண்டார்.

சர்வதேச சமூகத்தின் நிதானமற்ற நிலையை சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பு எப்படி சமாளிப்பது, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள், சீனாவுடன் ஒத்துழைப்புகளை மேற்கொள்வது, சர்வதேச நிலைமையின் நிதானமற்ற நிலையைச் சமாளிப்பதற்கு துணை புரியும் என்று 83.9 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். சீனாவின் பெருமளவிலான சந்தை, ஜெர்மனியின் நிறுவனங்களுக்கு முக்கிய வாய்ப்பாக திகழ்கின்றது என்று 90.2 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். நிதானமான சீன-ஜெர்மன் உறவு, இரு நாட்டு நலனுக்கு தொடர்புடையது. இது மட்டுமல்ல, சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பின் முன்மாதிரியாக இது இருக்கின்றது என்று 83.6 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author