சீனா பற்றி சர்வதேச சமூகம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்:ஸ்பெயின் தலைமை அமைச்சர்

Estimated read time 1 min read

சீனாவில் பயணம் மேற்கொண்டு வரும் ஸ்பெயின் தலைமை அமைச்சர் பெட்ரோ சான்ட்செஸ் 13ஆம் நாள் முற்பகல் ட்சிங்ஹுவா பல்கலைக்கழகத்தில் இருநாட்டுறவு பற்றி உரையாற்றிய போது, சீனா பற்றி சர்வதேச சமூகம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தற்போதைய உலகில் பூஜ்ஜியம்-தொகை விளையாட்டின் கண்ணோட்டத்தில் சிலர் செயல்படுகின்றனர். இத்தகைய கண்ணோட்டம் தவறானது மட்டுமல்ல ஆபத்தாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், பலதரப்புவாதத்தை உறுதியுடன் பின்பற்றும் ஸ்பெயின், ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்கும் அடிப்படையில் ஒத்துழைப்பு மேற்கொண்டு உரிய முறையில் கருத்து வேற்றுமையைக் கையாள்வதை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்பெயின் தலைமை அமைச்சராக சான்ட்செஸ் பதவியேற்ற 4 ஆண்டுகளில் தற்போது 4ஆவது முறை சீனப் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவுடனான ஒத்துழைப்பிலிருந்து ஸ்பெயின் பெற்றுள்ள சாதனைகள் மூலம், சுதந்திரமாக நடைமுறைக்கு ஏற்ப செயல்பட்டு, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் பாதையே, ஐரோப்பாவின் அடிப்படை நலனுக்கும் கால ஓட்டத்துக்கும் பொருந்திய சரியான தேர்வாகும் என்பதை மேலதிக ஐரோப்பிய நாடுகள் அறிந்து கொண்டுள்ளன.

You May Also Like

More From Author