இருப்புப் பாதை மூலம் 10கோடி டன் தாண்டிய சிட்சாங்கிற்கான சரக்குப் போக்குவரத்து

Estimated read time 1 min read

 

சீனாவின் சின் காய்-சிட்சாங் இருப்புப் பாதை சேவையளித்துள்ள 20 ஆண்டுகளில், அதன் மூலம் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்துக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் சரக்குகளின் எண்ணிக்கை நிலையாக அதிகரித்துள்ளது. 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் வரை, இந்த எண்ணிக்கை 10கோடி டன்னைத் தாண்டியுள்ளது.

2006ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள், சின் காய்-சிட்சாங் இருப்புப் பாதை பன்முகமாகச் சேவையளித்ததுடன், சிட்சாங்கில் இருப்புப் பாதை இல்லாத வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சரக்கு போக்குவரத்துத் தேவையின் அதிகரிப்புடன், சின் காய்-சிட்சாங் இருப்புப் பாதையின் சரக்கு போக்குவரத்துத் திறனும் இடைவிடாமல் உயர்ந்து வருகிறது. இருப்புப்பாதை பிணையமும் தொடர்ந்து மேம்பட்டுத்தப்பட்டு வருகிறது.  

லாசா-ரிகாட்சே, லாசா-லின்ட்சி ஆகிய இருப்புப்பாதைகள் அடுத்தடுத்து சின் காய்-சிட்சாங் இருப்புப்பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது, சிட்சாங்கில் இருப்புப்பாதையின் மொத்த நீளம் 1000கிலோ மீட்டரைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author