சீன ஊடகக்
குழுமம், ஸ்லோவாக்கியாவுக்கான
சீனத் தூதரகம், ஸ்லோவாக்கியப் பண்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், எல்.இ.ஹுடெக்(L.E.HUDEC)
என்னும் ஆவணப்படத்தின் ஒளிபரப்புத்
துவக்க நிகழ்வு உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 22ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் பிராடிஸ்லாவாவில்
நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத்
துறைத் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங்
காணொளி வழியாக உரை நிகழ்த்தினார். ஸ்லோவாக்கியாவின் கட்டிடக்கலை, பண்பாடு, ஊடகம்
உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேலான விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து
கொண்டனர்.
ஷென் ஹாய்சியொங் கூறுகையில், சீனாவும், ஸ்லோவாக்கியாவும்
நல்ல கூட்டாளிகளாகத் திகழ்வதோடு மட்டுமல்லாமல், நீண்டகால சோதனையைத் தாக்குபிடித்து
உண்மையான நண்பர்களாகவும் திகழ்கின்றன. சீன ஊடகக் குழுமம், சீன-ஸ்லோவாக்கியப்
பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கான பாலத்தைத் தொடர்ந்து கட்டியமைக்கும் என்றார்.
மேலும், ஸ்லோவாக்கியாவுடன் மேலும் ஆழமான முறையில் மானுடவியல் பரிமாற்றம் மற்றும்
ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, மனித குலத்தின் எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாக
முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.