தியன்சோ-5 மூலம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் சாதனைகள்

தியன்சோ-5 சரக்கு விண்கலம், திட்டமிட்ட கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு, செப்டம்பர் 12ஆம் நாள் முற்பகல் 9:13 மணியில் கட்டுப்பாட்டு முறையின் கீழ் வளிமண்டலத்தில் நுழைந்தது.

இப்போக்கில் அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்து, சிறு அளவு சிதிலங்கள் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பான பகுதியில் விழுந்தன.
தியன்சோ-5 விண்கலத்தால் விண்வெளியில் கொண்டு செல்லப்பட்ட பல பயன்பாட்டு திட்டங்கள் சீராக நடைபெற்று, செழிப்பான சாதனைகள் பெற்றுள்ளன.

பயன்பாட்டு மற்றும் வளர்ச்சி கட்டத்தில் சீன விண்வெளி நிலையத்தின் செயல்பாடு மற்றும் மேலாண்மைக்கு இது முக்கிய அனுபவங்களைத் திரட்டியுள்ளது.
மக்கௌ மாணவர் அறிவியல் செயற்கைக் கோள்-1, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் தியன்சோ-5 விண்கலத்திலிருந்து ஏவப்பட்டது, இச்சாதனைகளில் ஒன்றாகும். சுற்றுவட்டப் பாதையில் சீராக இயங்கும் இச்செயற்கைக் கோள், வானொலி ஆர்வலர்களுக்கு விண்வெளி அறிவியல் பயிற்சி தளத்தை வழங்குகிறது.

தவிரவும், சுற்றுவட்டப் பாதையில் விண்வெளி ஹைட்ரஜன்-ஆக்ஸிஜன் எரிபொருள் மின்கலத்தின் சோதனை வெற்றி பெற்றது. விண்வெளி எரிபொருள் மின்கல ஆற்றல் முறைமையின் தயாரிப்புக்கும் முக்கிய தொழில் நுட்பப் பிரச்சினையின் தீர்வுக்கும் இது தரவு மற்றும் தத்துவ ரீதியான ஆதாரம் வழங்குகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author