சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் செப்டம்பர் 12 ஆம் நாள் 2024ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இக்கண்காட்சிக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், இக்கண்காட்சி 10 முறைகள் வெற்றிகரமாகவும் நடைபெற்று, திறப்பு ரக உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்றியுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், உயர் நிலை திறப்புடன் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவதில் சீனா ஊன்றி நின்று, உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பு அமைப்புமுறையை மேம்படுத்தி, சந்தைமயமாக்கம், சட்டமயமாக்கம், சர்வதேசமயமாக்கம் ஆகியவற்றைக் கொண்ட முன்னணி வணிகச் சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும்.
உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து, வாய்ப்புகளைக் கூட்டாக அனுபவித்து, ஒத்துழைப்பைக் கூட்டாக விவாதித்து, வளர்ச்சியைக் கூட்டாக மேம்படுத்தி, உலகப் பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றி, பல்வேறு நாட்டு மக்களுக்கும் அதிக நன்மை பயக்க பங்காற்ற சீனா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
