ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன்,சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவரும் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் தற்போதைய நிலைமைகள், இரு நாட்டுறவு, உள்ளிட்டவை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகம், சீனாவின் தொலைநோக்கு கூட்டாளியாகத் திகழ்கிறது. சீனா எப்போதும், ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இரு நாட்டுறவை வலுப்படுத்துவது இரு தரப்புகளின் பொது கருத்தாகும். இரு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கும் இது ஏற்றது என்று தெரிவித்தார்.
மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து பேசுகையில், அமைதி மற்றும் பேச்சுவார்த்தை ஊக்குவிப்பது என்ற சீனாவின் நிலைப்பாட்டை வலியுறுத்திய ஷசிச்சின்பிங், சீனா இதற்காக தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக பங்கு ஆற்றும் என்று உறுதிப்படுத்தினார். வருவதை தெளிவுபடுத்தினார். மேலும், மத்திய கிழக்கில் அமைதியை பேணிக்காப்பது மற்றும் மேம்படுத்துவது குறித்து, அமைதியான சகவாழ்வை நிலைநிறுத்தல், நாட்டின் இறையாண்மையை பாதுகாத்தல், சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியை கடைபிடித்தல், வளர்ச்சியையும் பாதுகாப்பையும் ஒருங்கிணைத்தல் ஆகிய 4 அம்ச முன்மொழிவுகளை வழங்கினார்.
இச்சந்திப்பில் பட்டத்து இளவரசர் காலித் கூறுகையில்,
சீனாவுடனான உறவை வளர்ப்பதில் ஐக்கிய அரபு அமீரகம், அதிக கவனம் செலுத்தி வருகிறது. இரு நாட்டு தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒருமித்த கருத்துக்களை நடைமுறைக்குக் கொண்டு வந்து, ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டுறவுக்குப் பரந்த எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறது என்று தெரிவித்தார். மேலும், சீனாவுடன் இணைந்து நெருங்கிய தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பைப் பராமரித்து, தொடர்புடைய தரப்புகள் போர்நிறுத்தத்தை ஊக்குவித்து, பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டு, சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தி, உலகளாவிய பொருளாதாரம் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்ய ஐக்கிய அரபு அமீரகம் பாடுபடும் என்று அவர் கூறினார்.
