முதல் காலாண்டில் சீன சரக்குகளின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை 15விழுக்காடு அதிகரிப்பு

Estimated read time 0 min read

சீன சுங்கத் துறை தலைமைப் பணியகம் 14ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை வரலாற்றில் இதே காலத்தில் இருந்ததை விட, முதன்முறையாக ஒரு லட்சத்து 11லட்சம் கோடி யுவானைத் தாண்டியது. இத்தொகை 11லட்சத்து 84ஆயிரம் கோடி யுவானை எட்டி 15விழுக்காடு அதிகரித்தது.

அவற்றில் தனியார் நிறுவனங்களின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை 6லட்சத்து 78ஆயிரம் கோடி யுவானைத் தாண்டி சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகையிலுள்ள விகிதத்தில் 57.3விழுக்காடாக அதிகரித்தது.

மின்சார வாகனம், லித்தியம் பேட்டரி, காற்றாற்றல் மின்னாக்கிகள் மற்றும் அதன் உதிரிப்பாகங்கள் ஆகிய பசுமை உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி முறையே 77.5, 50.4 மற்றும் 45.2விழுக்காடு அதிகரித்தன.

You May Also Like

More From Author