கருடன் மற்றும் மாமன் போன்ற படங்களில் சமீபத்திய வெற்றிகளுக்குப் பிறகு, பிரபல தமிழ் நடிகர் சூரி, திரைப்படத் துறையில் அடுத்த கட்டமாக தயாரிப்பாளராகவும் களமிறங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆரம்பத்தில் துணை நடிகராக வந்து, காமெடி நடிகராகி, பின்னர் தற்போது கதையின் நாயகனாக படங்களில் நடித்து வருகிறார்.
கதை நாயகனாக தொடர்ச்சியான வெற்றிகளைத் தொடர்ந்து, முன்னணி இயக்குநர்கள் அவருக்கு கதை கூறவும், பல தயாரிப்பாளர்கள் அவரது தேதிகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே நடிகர் சூரி, தற்போது அடுத்து வரவிருக்கும் தனது மண்டாடி திரைப்படத்தில் முழுமூச்சாக கவனம் செலுத்தி வருகிறார்.
தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்கத் தயாராகி வரும் நடிகர் சூரி?
