ஸ்பெயின் தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

Estimated read time 1 min read

ஸ்பெயின் தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம் நாள் காலை பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஸ்பெயின் தலைமை அமைச்சர் சான்ட்செஸூடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சர்வதேச நிலைமை பதற்றமாக இருந்தாலும், சீன-ஸ்பெயின் உறவு எப்போதும் நிலையாக வளர்ந்து வருகிறது. சீனப் பாணி நவீனமயமாக்கலை முன்னேற்றும் உறுதியான மனவுறுதி நமக்கு உண்டு. உயர் நிலையான வெளிநாட்டு திறப்பு வழியாக உலகத்துடன் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் விருப்பமும் உண்டு. சீனாவின் வளர்ச்சி, உலகப் பொருளாதாரத்துக்கு நம்பிக்கை மற்றும் உந்து ஆற்றலைக் கொண்டு வரும் என்று தெரிவித்தார். மேலும், சீனாவும் ஸ்பெயினும் இரு நாட்டு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவில் மேலதிகமான சாதனைகளைப் பெறுவதைக் கூட்டாக முன்னேற்றி இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைப் படைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சான்ட்செஸ் கூறுகையில், ஒரே சீனா கொள்கையில் ஸ்பெயின் உறுதியாக ஊன்றி நிற்கிறது. நெடுநோக்கு உறுதித் தன்மையுடைய ஸ்பெயின்-சீன உறவை வளர்ப்பத்தில் ஸ்பெயின் உறுதியாகப் பாடுபடும் என்று கூறினார். மேலும், வர்த்தகம், முதலீடு, புதிய எரியாற்றல் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி மானிட பண்பாட்டியல் பரிமாற்றங்களை முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

More From Author