உலக தரவு அமைப்பு நிறுவப்பட்டதற்கு சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் 30ஆம் நாள் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
அவர் கூறுகையில், விரிவான ஆலோசனை, கூட்டு பங்களிப்பு, பகிரப்பட்ட நன்மைகள் ஆகிய கருத்துகளை சீனா கடைப்பிடித்து, உலகத் தரவு அமைப்பு தனது பங்கை ஆற்றுவதற்கு ஆதரவளிக்கும் என்றார். தரவு நிர்வாக விதிகளுக்கான ஒருமித்த கருத்தை உருவாக்கவும், டிஜிட்டல் மற்றும் நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் புத்தாக்கத்தை முன்னெடுக்கவும், தரவுகளின் பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான இயக்கத்தையும், திறமையான மேம்பாடு மற்றும் பயன்பாட்டையும் ஊக்குவிக்கவும், உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவவும், தரவுகளின் நன்மைகள் அனைத்து நாடுகளின் மக்களுக்கும் பயனளிக்க துணை புரியவும், சீனா அனைத்து தரப்புகளுடன் இணைந்து பணியாற்றும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலக தரவு அமைப்பு நிறுவப்பட்ட மாநாடு, ‘தரவு ஒத்துழைப்புத் தளத்தை கூட்டாக உருவாக்குதல், டிஜிட்டல் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல்’ என்ற தலைப்பில் 30ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
