சுமார் 600 வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், நீதித்துறை முடிவுகளை, குறிப்பாக அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், ஒரு அரசியல் அழுத்தம் தங்களை அச்சுறுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.
மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே மற்றும் பிங்கி ஆனந்த் உட்பட இந்தியாவில் உள்ள 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எழுதிய கடிதத்தில், நீதித்துறையில் செல்வாக்கு செலுத்த, ஆதிக்கம் செலுத்த நடைபெறும் முயற்சிகள் குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், நீதித்துறை முடிவுகளை பாதிக்கும் வகையில் அழுத்தம் தரும் தந்திரங்களை அந்த குழு பயன்படுத்துவதாக வழக்கறிஞர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.