தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4, 2025 முதல் விண்ணப்பிக்கலாம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம், தற்போது 1.14 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், சில பெண்கள் அப்ளே செய்தும் அவர்களுக்கு ரிஜெக்ட் ஆனது. மேலும், சில பெண்கள் இன்னும் இந்த திட்டத்திற்கு அப்ளே செய்யாமல் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே, ஜூன் 4, 2025 முதல் விண்ணப்பிக்கலாம் என்கிற முக்கிய தகவலை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கீதா ஜீவன் ” வரும் ஜீன் மாதம் 4-ஆம் தேதி மக்களுடன் முதல்வர் என்கிற முகாம்களில் விடுபட்டவர்கள் முறையான ஆவணங்களுடன் இம்முகாம்களில் விண்ணப்பித்தால், தகுதியின் அடிப்படையில் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, மொத்தம் 9,000 முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கிறது.
அந்த முகாம்களுக்கு சென்று ஏற்கனவே திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். அதைப்போல விண்ணப்பம் செய்யாமல் இருந்த பெண்கள், தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பம் செய்துகொள்ளலாம்” எனவும் அமைச்சர் கீதா ஜீவன் பேசியுள்ளார்.