15வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், சீனாவின் சில மாநிலங்கள், பிரதேசங்கள் மற்றும் நகரங்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் கூட்டம் ஏப்ரல் 30ஆம் நாள் ஷாங்காயில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் தலைமை வகித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இவ்வாண்டு, 14வது ஐந்தாண்டுத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவோம். திட்டமிட்டுள்ள இலக்குகளை நனவாக்கும் அதேவேளையில், (2026-2030)15வது ஐந்தாண்டுத் திட்ட காலக் கட்டத்தில் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.
மேலும், சர்வதேச சூழ்நிலையின் மாற்றம், சீனாவுக்கான பாதிப்பை தொலைநோக்குத் தன்மையுடன் கடைப்பிடிக்க வேண்டும். உயர்நிலையான வெளிநாட்டுத் திறப்பை உறுதியுடன் விரிவாக்கி, உயர்தர வளர்ச்சியை பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும்.
அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புத்தாக்கத்தை வழிக்காட்டுதலாகக் கொண்டு, பாரம்பரிய தொழில்களின் வளர்ச்சி முறை மாற்றத்தை முன்னேற்றி, புதிதாக வளரும் தொழில்களை ஆக்கமுடன் விரிவுப்படுத்த வேண்டும்.
வளர்ச்சியை முன்னேற்றுவதுடன் மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணிக்காத்து மேம்படுத்தி, கூட்டுச் செழுமையை முன்னேற்ற வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.