தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

Estimated read time 0 min read

தொகுதி மறுவறையரை காரணமாக ஆபத்து என திமுக கூறி வரும் நிலையில் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஏறக்குறைய சமமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருக்குமாறு எல்லைகள் மாற்றப்படுகின்றன. இதன் மூலம் அனைத்து வாக்காளர்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கும்

எல்லைகளை பிரிக்கும்போது மாவட்ட எல்லைகள், ஆறுகள், மலைகள் போன்ற இயற்கை அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒடுக்கீடு இடங்களை அவர்களின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள பகுதிகளுக்கு ஏற்ப இந்த ஆணையம் ஒதுக்குகிறது. இதனால் அவர்களுக்கான அரசியல் அங்கீகாரம் உறுதி செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஓட்டிற்கும் சமமான மதிப்பு என்ற கோட்பாடு உண்மையாக்கப்படுகிறது. இதன் மூலம் ஜனநாயகம் மேலும் வலுவடைகிறது.

ஒரு தொகுதி பெரிதாக இருக்கும் போது மக்கள் பிரநிதியால் அனைத்து இடங்களுக்கும் சென்று குறைகளைக் கேட்பது கடினம். எல்லைகள் முறைப்படுத்தப்படும்போது நிர்வாகச் செயல்பாடுகள் எளிதாகுகின்றன.

மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு மற்றும் அரசுத் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்கிறது

You May Also Like

More From Author