ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா, தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ஜேசிபி இயந்திரம் மூலம் 2 டன் மலர்களை வேட்பாளர் மீது தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பரப்புரை மேற்கொண்டார்.
