உத்தரப்பிரதேசத்தில் SIR நடவடிக்கை – 2.89 கோடி பேர் நீக்கம்!

Estimated read time 1 min read

உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து 2 கோடியே 89 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பேட்டியளித்த உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி நவதீப் ரின்வா, கடந்த மாதம் 4-ம் தேதி தொடங்கிய SIR பணிகள், இம்மாதம் 26-ம் தேதியுடன் நிறைவடைந்ததாக தெரிவித்தார்.

நாளை மறுதினம் வெளியாகவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 12 கோடியே 50 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள் என 2 கோடியே 88 லட்சத்து 75 ஆயிரம் நபர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

SIR-க்கு பிறகு 18 புள்ளி 70 சதவீதம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author