பிரதமர் மோடி, தனது பெற்ற நினைவு பரிசுகளை ஏலமிடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு ஏலத்தில் கிடைக்கும் பணத்தை கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு வழங்குவதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்த ஏலமிடும் வழக்கம் அவர் குஜராத்தின் முதல்வராக இருந்த காலம் தொட்டு செய்து வருகிறார்.
அவரது பொது வாழ்வில் இது ஆறாவது முறையாக நடைபெறும் ஏலமாகும்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று ஆரம்பமான இந்த ஏலம், அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறும்.
கிட்டத்தட்ட 600 பொருள்கள் ஏலத்தில் வழங்கப்படவுள்ளன, இதன் மொத்த ஆரம்ப விலை சுமார் ரூ.1.5 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
பிரதமரின் நினைவு பரிசுகள் ஏலத்திற்கு: விலை ரூ.600 முதல் ரூ.8.26 லட்சம்!
