தொகுதி வரையறை தமிழகத்திற்கு லாபமா? நஷ்டமா?: அமித்ஷாவின் விளக்கமும், தற்போதைய கள நிலவரமும்  

Estimated read time 1 min read

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் இறுதி கட்ட வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த மாற்றங்களால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் அரசியல் அதிகாரம் பறிபோகும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்பது ஒரு “தவறான புரிதல்” என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை 543-லிருந்து சுமார் 816 முதல் 850 வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் சீரான முறையில் இடங்கள் அதிகரிக்கப்படும், இதன் மூலம் எந்தவொரு மாநிலத்தின் இடமும் குறையாது, மாறாக அதிகரிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

You May Also Like

More From Author