ஜிபூட்டி நாட்டின் அரசு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்மாயில் ஒமர் குவெல்லேவுக்கு, சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் 17ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த ஆண்டுகளில் இருதரப்புகள் பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, நடைமுறை ஒத்துழைப்பில் பல சாதனைகளைப் பெற்றுள்ளன என்றார். சீனா-ஜிபூட்டி நட்புறவையும், அனைத்து துறைகளிலும் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதில் குவெல்லே நீண்ட காலமாக பங்காற்றி வருவதற்கு பாராட்டை தெரிவித்ததோடு, சீனா-ஜிபூட்டி உறவின் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், இருநாட்டு முக்கிய நலன்கள் மற்றும் அக்கறைகள் தொடர்பான விவகாரங்களில் ஒருவருக்கொருவர் உறுதியாக ஆதரவளிக்கவும், சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டின் சாதனைகளைச் செயல்படுத்தவும், சீனா-ஜிபூட்டி பன்முக உத்திநோக்கு கூட்டாளியுறவின் உள்ளடக்கத்தைத் தொடர்ந்து வளப்படுத்தவும், இருநாட்டு மக்களுக்கும் சிறந்த முறையில் பயனளிக்கவும், குவெல்லேவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
