சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகத்தைச் சேர்ந்த சேவை துறை கள ஆய்வு மையமும், சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனமும் 30ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் திங்களில், சீன ஆக்கத் தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடான பி.எம்.ஐ 49.7 விழுக்காடு அதிகரித்தது. இது, மே திங்களில் இருந்ததை விட 0.2 விழுக்காட்டு அதிகம். ஏப்ரல் திங்களில் இருந்ததை விட 0.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆக்கத் தொழிற்துறை தொடர்ந்து மேம்பாட்டு வருகிறது.
ஜூன் திங்களில், பெரிய ரக தொழில் நிறுவனங்களின் பி.எம்.ஐ 51.2 விழுக்காடாகும். இது, மே திங்களில் இருந்ததை விட 0.5 விழுக்காடு உயர்ந்து, தொடர்ந்து அதிகரித்து, ஆக்கத் தொழில் துறைக்கான ஆதரவு பங்கு மிகவும் வலிமையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.