7வது “சீன விவசாயிகளின் அறுவடை விழாவை” முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கும், வேளாண்மை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகள் தொடர்பான பணிகளில் ஈடுபடும் மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இவ்வாண்டு இயற்கை சீற்றம் உள்ளிட்ட சாதகமற்ற பாதிப்பைச் சமாளித்து, கோடைக்கால தானிய விளைச்சல் அதிகரிப்பையும், முப்போக நெல் விளைச்சல் நிதானத்தன்மையையும் நனவாக்கியுள்ளோம்.
இவ்வாண்டு தானியத்தின் அமோக அறுவடை அடைய வாய்ப்புள்ளது. பொருளாதார மீட்சியின் சீரான போக்கினை வலுப்படுத்தி, உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு இது வலுவான ஆதாரத்தை வழங்கியுள்ளது என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றினால், வேளாண் துறையை வலுப்படுத்தி, கிராமிய மறுமலர்ச்சியை முன்னேற்ற வேண்டும். வேளாண் துறையின் பயன், விவசாயிகளின் வருமானம் மற்றும் கிராமங்களின் உயிராற்றலை அதிகரிக்க பல்வேறு நிலை கட்சி குழுக்களும், அரசுகளும் முழுமூச்சுடன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். மிகப் பரந்துபட்ட விவசாயிகளும், பல்வேறு சமூகத் துறையினர்களும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு, கிராமிய மறுமலர்ச்சியையும், வேளாண்மை மற்றும் கிராமத்தின் நவீனமயமாக்கத்தையும் நனவாக்குவதற்கும், வேளாண் வல்லரசைக் கட்டியமைப்பதற்கும் பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.