மதத் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க டிசம்பர் 31, 2024 வரை இந்தியாவிற்கு வந்த மற்ற நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள், பாஸ்போர்ட் அல்லது பிற பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த குடியுரிமை (திருத்த) சட்டத்தின் (CAA) படி, டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன்னர் இந்தியாவிற்கு வந்த இந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரின் உறுப்பினர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
2024-க்குள் இந்தியா வந்த சிறுபான்மையினர் தொடர்ந்து தங்க அனுமதி வழங்கிய மத்தியஅரசு
