கட்ச் கடற்கரை மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ‘அஸ்னா’ என்ற புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
சூறாவளி புயல் தற்போது புஜில் இருந்து மேற்கு-வடமேற்கில் 190 கிமீ தொலைவிலும், குஜராத்தின் நலியாவிலிருந்து 100 கிமீ மேற்கு-வடமேற்கிலும், பாகிஸ்தானின் கராச்சிக்கு தென்கிழக்கே 170 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்தியக் கடற்கரையிலிருந்து விலகி வடகிழக்கு அரபிக்கடலில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் அருகே அரபிக்கடலில் உருவானது புதிய புயல்
Estimated read time
1 min read