பஹல்காம் தாக்குதலின் ஓராண்டு நினைவு தினத்திற்கு இந்தியா ராணுவத்தின் போஸ்ட்  

Estimated read time 1 min read

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, “இந்தியா எதையும் மறக்காது” என்று இந்திய ராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்பதை மீண்டும் பறைசாற்றியுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒருபோதும் சகிப்புத்தன்மையுடன் இருக்காது என்பதை இந்திய ராணுவம் செவ்வாயன்று மிகத்தெளிவாக உறுதிப்படுத்தியது.
“சில எல்லைகள் ஒருபோதும் தாண்டப்படக்கூடாது” என்று குறிப்பிட்ட ராணுவம், மனிதநேயத்தின் எல்லைகள் மீறப்படும்போது இந்தியாவின் பதில் மிகத் தீவிரமாகவும் தீர்க்கமாகவும் இருக்கும் என்று எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த துயரச் சம்பவத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, ராணுவம் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author