‘2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு’: மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி  

Estimated read time 1 min read

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் வரும் 2033-ஆம் ஆண்டுக்குள் மருத்துவக் காப்பீடு வரம்பிற்குள் கொண்டு வருவதே மத்திய அரசின் இலக்கு என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நேற்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
காப்பீடுத் துறை இந்தியாவில் மிக வேகமாக விரிவடைந்து வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், கடந்த 2024-25 நிதியாண்டில் மட்டும் 58 கோடி பேர் காப்பீடு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஏழை எளிய மக்களும் காப்பீடு வசதி பெறுவதை உறுதி செய்ய ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author