சீன வணிக அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரதிநிதியும் துணை அமைச்சருமான லீ ட்செங் காங் ஆகஸ்ட் 27முதல் 29ஆம் நாள் வரை அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டபோது, அந்நாட்டு நிதி அமைச்சகம், வணிக அமைச்சகம் மற்றும் வர்த்தகப் பிரிதிநிதி அலுவலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் அடிப்படையில், சீன -அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள், சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான பொது கருத்துக்களை நடைமுறைப்படுத்துவது முதலியவை குறித்து இரு தரப்பும் பரிமாற்றம் மேற்கொண்டன.
தவிர, அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட போது, அமெரிக்க-சீன வர்த்தக கவுன்சில், அமெரிக்க வணிக சபை மற்றும் தொடர்புடைய அமெரிக்க நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் லீ ட்செங் காங் பேச்சுவார்த்தை நடத்தினார்.