பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்வினையாற்றியுள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஜெய்ஸ்வால் பேசுகையில், “பாகிஸ்தானின் ரகசியமான மற்றும் சட்டவிரோத அணுசக்தி நடவடிக்கைகள் அதன் வரலாற்றிற்கு புதியதல்ல. பல தசாப்தங்களாக நீடித்த கடத்தல், ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு மீறல்கள், ரகசிய கூட்டாண்மைகள் மற்றும் ஏ.க்யூ. கான் நெட்வொர்க் வழியாக அணு ஆயுதப் பரவல் ஆகியவைதான் அதன் மையமாக உள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும், “பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதில் இந்தியா எப்போதும் முனைப்புடன் செயல்பட்டுள்ளது” என்றும் ஜெய்ஸ்வால் கூறினார்.
பாகிஸ்தானின் சட்டவிரோத அணு ஆயுத நடவடிக்கைகள் அதன் வரலாற்றின் பிரதிபலிப்பு: மத்திய அரசு
