ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி குழு, 9ம் நாள் ஐ.நாவின் தலைமையகத்தில், உலகளாவிய நிர்வாகத்தின் நண்பர்கள் குழுவை உருவாக்கும் கூட்டம் ஒன்றை நடத்தியது. சுமார் 40 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூ சொங் கூறுகையில், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, உலக நிர்வாகத் துறையில் முக்கிய பிரச்சினைகள் குறித்து தொடர்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, மேலும் நியாயமான உலக நிர்வாக அமைப்பு முறையின் உருவாக்கத்தை முன்னெடுப்பது, இந்த நண்பர்கள் குழுவின் இலக்காகும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பங்கெடுத்த பிரதிநிதிகள், உலக நிர்வாக முன்மொழிவுக்கு ஒப்புதல் மற்றும் ஆதரவை அளித்துள்ளனர். இக்குழுவின் உறுப்பு நாடுகள், கொள்கை சார்ந்த பரிமாற்றம் மற்றும் பயன் தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பலதரப்புவாதத்தைப் பேணிக்காப்பது மற்றும் உலக நிர்வாக அமைப்பு முறை கட்டுமானத்துக்குப் புதிய உந்து சக்தியை ஊட்ட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
