தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி அரசு கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் மிக முக்கியமான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வக் கூட்டம் இது என்பதால், தேர்தல் வாக்குறுதிகள், நிதி நெருக்கடி, புதிய பட்ஜெட் மற்றும் கொள்கை முடிவுகள் எனப் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ள கோட்டையை நோக்கி ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் திரும்பியுள்ளது.
விஜய் தலைமையில் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று; என்ன எதிர்பார்க்கலாம்?
