சீனா-கேப் வெர்டே தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவு குறித்து இருநாட்டு தலைவர்களின் வாழ்த்துகள்

சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங், கேப் வெர்டே குடியரசின் அரசு தலைவர் நெவ்ஸ் ஆகியோர் இருநாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவையொட்டி,25ஆம் நாள் வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.

ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளில் தங்கள் முக்கிய நன்மைகள் மற்றும் அக்கறை கொண்ட விவகாரங்களில் இருநாடுகள் ஒன்றுக்கொன்று புரிந்துகொண்டு ஆதரவளித்து வருகின்றன என்றார். வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதார துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீனா-கேப் வெர்டே உறவின் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதோடு, இருநாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு,நடைமுறை ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், பலதரப்புவாத ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சீனா-கேப் வெர்டே உத்திநோக்கு கூட்டாளியுறவை ஊக்குவிக்கவும், நெவ்ஸ்ஸுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author