முழுமையாக விலகுகிறேன் – நடிகர் தாடி பாலாஜி..!!

Estimated read time 0 min read

லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் ஜேசிஎம் அமைப்பு தொடங்கி நடத்தி வந்தார். அவர் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கினார்.

விஜய் கட்சியான தவெகவில் இருந்த நடிகர் தாடி பாலாஜி, அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.

தவெக கட்சி தொடங்கப்பட்ட சிலநாட்களிலேயே அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட தாடி பாலாஜி, தவெகவுக்கு எவ்வளவு ஆதரவாக பேசியும் பொறுப்பு வழங்கப்படாததால் விரக்தியில் இருந்தார்.

இந்நிலையில், நடிகர் தாடி பாலாஜி, லட்சிய ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். முன்னதாக தவெகவில் இருந்து விலகிய அவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சியில் கடந்த ஆண்டு இணைந்தார். தற்போது கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார். எனினும், அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து அவர் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

You May Also Like

More From Author