சியரா லியோன் நாட்டில் இலவச மருத்துவ சேவை வழங்கிய சீன குழு

ஏப்ரல் 25ம் நாள் உலக மலேரியா தடுப்பு தினமாகும். சியரா லியோன் நாட்டுக்கான 27வது சீன மருத்துவ உதவிக் குழு அன்று, அந்நாட்டின் தலைநகர் ஃப்ரிடௌனில் சுமார் 300 பேருக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கியது.

சீன மருத்துவக் குழுவினர்கள், உள்ளூர் மக்களுக்கு மலேரியா நோய் பற்றிய தகவல் கையேடுகளை வினியோகித்து, தொடர்புடைய தடுப்புத் தகவல்களை விளக்கிக் கூறினர்.

மருத்துவக் குழு நிபுணர்கள், குடிமக்களிடையில் அடிக்கடி ஏற்படும் இரத்தக் கொதிப்பு, தீரா நோய்கள் முதலிய பல்வகை நோய்கள் குறித்து விரிவான முறையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

You May Also Like

More From Author