2025ஆம் ஆண்டுக்கான 10 பெரிய அறிவியல் முன்னேற்றங்களை அமெரிக்காவின் அறிவியல் இதழ் 18ஆம் நாள் வெளியிட்டுள்ளது. அவற்றில் தவிர்க்க முடியாத உலகப் புதுப்பிக்கவல்ல எரியாற்றலின் அதிகரிப்பு இவ்வாண்டின் மிகப் பெரிய முன்னேற்றமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு, உலகின் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் உற்பத்தி பல துறைகளிலும் பாரம்பரிய எரியாற்றலைத் தாண்டியுள்ளது. இந்த மாற்றத்தைச் சீனா தான் வழிநடத்தியுள்ளது. சூரிய ஒளித் தகடு, காற்றாலை, லித்தியம் பேட்டரி ஆற்றல் சேமிப்பு முதலிய துறைகளின் வளர்ச்சியைச் சீனா தொடர்ந்து விரிவாக்கி உலகின் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் உற்பத்தி மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களில் உலகளவில் முன்னணித் தகுதியை நிலைநிறுத்தியுள்ளது.
